18 ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) - வசனம் : 01
اَ لْحَمْدُ لِلّٰهِ الَّذِىْۤ اَنْزَلَ عَلٰى عَبْدِهِ الْكِتٰبَ وَلَمْ
يَجْعَلْ لَّهٗ عِوَجًا ٚ ؕ
1. தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.
சிறிய விளக்கவுரை
A.
அல்ஹம்து
( اَ لْحَمْدُ) விளக்கம்
“எல்லா
புகழும் நன்றியும் அல்லாஹ்விற்கே”
B.
நன்றி
மற்றும் புகழுக்குள்ள வித்தியாசம்:
1. நமக்கு விரும்பத்தகாதவர் நமக்கு ஏதேனும் நன்மை செய்தல் நாம் அவருக்கு நன்றி கூறுவோம்
2. இருப்பினும், அந்நபரின் தீய பண்புகளுக்கு நாம் நன்றி தெரிவிப்பதில்லை .
3. ஒரு சிலர் நமக்கு எந்தவித நன்மையையும் செய்யாதநிலையிலும் நாம் அவர்களை புகழ்கிறோம்.
4. நாம் புகழ்வதற்கான காரணம் அவரிடம் ஏதேனும் ஒரு நற்பண்பை நாம் காண்கிரோம்.
5. நன்றியை இதையத்தால் , நாவால் மற்றும் கரங்களால் (செய்கைகளால்) தெரிவிக்கமுடியும்.
6. புகழ்வதை இதயத்தால் மற்றும் நாவால் தெரிவிக்கமுடியும்.
C.
அடியான் (عَبْدِهِ ):
1. இறைத்தூதர் (ﷺ) இந்த பண்புடையவராக விவரிக்கப்படுகிறார்
2. அவர்கள் (ﷺ) இறை அடியானாக இருப்பது இறைவனின் ஓர் அருட்கொடை
3. ஒருவர் இறைவனுக்கல்லாமல் மனிதர்களுக்கு அடிமையாக இருப்பின் அது இறைவனுக்கு அவர் ஏற்பதுதும் அவமானமாகும்.
4. அல்லாஹ் இறைத்தூதரை (ﷺ) அடியான் என்று 3 (மூன்று) தருணங்களில் அழைக்கின்றான்
i.
திருக்குர்ஆனை அருளும்போது
ii.
குற்றச்சாட்டுகளிலிருந்து இறைத்தூதரை (ﷺ) காக்கும்பொழுது
iii.
விண்ணுலக பயணத்தின் பொழுது (இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்)
D.
அவன் எதை அருளினான் ? (الْكِتٰبَ) :
1. இறைவன் இந்த வல்லமை மிக்க குர் ஆணை தனது உத்தம இறைதூதர் முஹம்மது நபியவர்களுக்கு (ﷺ) அருளியதைக்கொண்டு பெருமிதம் கொள்கிறான், இது மனிதர்களுக்கு இறைவன் அருளிய மாபெரும் கிருபையாகும்
2. குர்ஆனின்முலமாக மக்களை இருளிலிருந்து
வெளிச்சத்தின் பக்கம் நேர்வழி படுத்துகிறான்
3.
இவ்வேதத்தை நேரானதாகவும் எவ்வித முரண்பாடு மற்றும் குழப்பம் அற்றதாக அருளியிருக்கின்றான். (மற்ற சமைய வேதநூல்களை ஆராய்ந்து பார்க்கவும்!)
உங்கள் வாழ்க்கையில் இதை கொண்டு வாருங்கள்
(செயல் திட்டம்)
இறைவனை புகழ்ந்து அவனுடைய உண்மையான அடியானாக
- உணர்வுடன் இருங்கள் – இறைவன் அருளால் படிப்படியாக இறைவனை நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் புகழுங்கள் , அது தும்மலில் இருந்து தொழுவதிலும். இப்பொழுதிலிருந்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இறைவனை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தொழுகையில் அல்லாஹுஅக்பர் என்றும், சமி அல்லாஹு லிமன் ஹமிதா போன்றவை கூறும் பொழுதும் இறைவனை உணர்ந்து புகழுங்கள். இச்சொற்களின் பொருள் தெரிந்துகொள்வது நமது கடமை அதில் முனைப்பு காட்டுங்கள்.
- புதிய முயற்சி: அல்லாஹ்வை புகழ்ந்து போற்றி கேட்கப்படும் துஆக்களுக்கு மாபெரும் அந்தஸ்தும் விரைவில் அங்கீகரிக்கக்கூடிய வகையாக இருக்கும். அல்லாஹ்வை புகழ்வதற்கு கற்றுக்கொள்ளுங்கள் (நீங்கள் கற்றதை நம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்)
No comments:
Post a Comment