18. ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) - வசனம் : 03
C. நம்பிக்கை : அல்லாஹ் நம்மை படைப்பதற்கு முன்னரே சுவனத்தையும் நரகத்தையும் படைத்துவிட்டான் மேலும் இவை என்றேன்றும் நிலைத்திருக்கும் என்று விசுவாசம்கொள்ள வேண்டும்.
1. ஓது! – குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் சுவனத்தை பற்றிய குறிப்புகளை ஓதுவோம், அதனை பற்றி சிந்திப்போம், அதில் என்றேன்றும் இருப்பதுபோல உணருவோம். இச்செயல் நமக்கு சுவனத்தை அடைவதற்கு ஒரு மாபெரும் ஊந்துதலாகயிருக்கும்.
مّٰكِثِيْنَ فِيْهِ اَبَدًا ۙ
18:3. அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.சிறிய விளக்கவுரை
A.
“18:3. அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.” (مّٰكِثِيْنَ فِيْهِ) பொருள் அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தை பரிசாக அளிப்பான் அதில் அவர்கள் சதாகாலமும் தங்கியிருப்பார்கள்
“என்றென்றும்”
(اَبَدًا)பொருள் : எப்போதும், முடிவில்லாமல், நிரந்தரமாக
B.
சுவனம்:
1. முந்தைய வசனத்தில் அல்லாஹ் விசுவாசம் கொண்டோர்களுக்கு,
நற்காரியங்களை செய்பவர்களுக்கு நன்மாராயம் கூறுகின்றான்.
இங்கு அந்த நன்மாராயம் சுவனம் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்
2. மூன்று கேள்விகள்: உங்களை வினவிக்கொள்ளுங்கள்
i.
இந்த நன்மாராயம் கொடுப்பது யார்? அணைத்து பொருள்களின்மீது ஆற்றல் உடையவன் அல்லாஹ் ஒருவனே
ii.
நமக்கு இதை எத்திவைத்தது யார்? உத்தம நபி
(ﷺ)
iii.
நன்மாராயம் என்ன? ஒரு பிரத்தியேகமான,
எப்போதும் நிலைதிருக்கக்கூடிய, ஒரு ஒப்பில்லாத, ஈடு இணையற்றது.
இம்முன்றை உணர்ந்த ஸஹாபாக்கள் தங்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தி இறைவனிடத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற்றார்கள்.
3.
வேறுபாடு: நம்வாழ்நாளில்
நமது திறமைக்கும் ஆற்றலுக்கும் பல பரிசுகளை, பாராட்டுகளை நாம் பெற்றுயிருப்போம், அவை அனைத்தும் நிரந்தரமற்றது, காலத்தால் அழியக்கூடியது.. சுபஹானல்லாஹ், நமது செயல்களை ஏற்றுக்கொண்டு அவனது கருணையால் அவன் தரும் பரிசு நித்தியமானது, நிரந்தரமானது, முடிவில்லாதது.
4. விசுவாசம் கொண்டோர்களுக்கு தங்களின் வாழ்க்கையை நெறிப்படுத்திக்கொள்ள நற்காரியங்களை
செயல்படுத்த இறைவனிடத்தில் இந்த ஒரு வாக்குறுதி ஊந்துதலை ஏற்படுத்த போதும் அல்லவா?
உங்கள் வாழ்க்கையில் இதை கொண்டு வாருங்கள் (செயல் திட்டம்)
No comments:
Post a Comment