18. ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) - வசனம் : 02
18:02
قَيِّمًا لِّيُنْذِرَ بَاْسًا شَدِيْدًا مِّنْ لَّدُنْهُ وَيُبَشِّرَ
الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا
حَسَنًا ۙ
18:02. அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்).
சிறிய விளக்கவுரை
A.
நேரான (வெளிப்படையான) கட்டளை (قَيِّمًا):
1. குர்ஆன் இறைவனின் வார்த்தை இதில் எவ்வித முரண்படும் கோணலும் இன்றி நேரான வெளிப்படையானதாகும்
2. “அச்சமூட்டுவதற்கா (எச்சரிப்பதற்காக)” என்று குறிப்பிட்டுள்து இறைத்தூதரையும் குர்ஆணையும் குறிக்கும், இரண்டும் ஏற்படுடையதே.
B. குர்ஆனில் காணப்படும் உதாரணம்:
1. அல்லாஹ் தீயவை பற்றி பேசும்போது நன்மையை பற்றியும் குறிப்பிடுகிறான்
2. அல்லாஹ் சுவனத்தை பற்றி கூறும்பொழுது நரகை பற்றியும் குறிப்பிடுகின்றான்
C.
என்ன கூறுகிறான்?
1. அல்லாஹ் அவனிடமுள்ள கடுமையான வேதனைகளை பற்றி அச்சமூட்டுவதற்க்காகவும் மற்றும் விசுவாசம் கொண்டோர்களுக்கு நன்மாராயம் கூறுகின்றான்
2. இறைவன் மிக கடுமையான வேதனைகளை இம்மையிலும் மறுமையிலும் தண்டனைகளாக வழங்குவானென்று குறிப்பிடுகின்றான்.
D.
நன்மாராயம் பெறுபவர் யார்? (اَجْرًا حَسَنًا):
அல்லாஹ் நம்முடைய செயல்களை எப்பொழுது ஏற்பான் என்றல்
1. பரிசுத்தமான முறையில் அல்லாஹ்வை நம்புவது மற்றும் அணைத்து விதமான செயல்களை அல்லாஹ்விற்காக மட்டும் செயல்படுத்துவது என்ற எண்ணம் கொள்ளுதல் (குர்ஆனை பார்க்கவும் 98:5,
39:2,3)
2.
நற்காரியங்களை சுன்னத்தான வழியில்
மேற்கொள்ளுதல்.
ஆயிஷா (ரலி) கூறினார். நபி (ﷺ) அவர்கள்கூறியதாக: "நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். (புகாரி & முஸ்லீம்)
உங்கள் வாழ்க்கையில் இதை கொண்டு வாருங்கள் (செயல் திட்டம்)
ஒவ்வொரு இபாதத்திற்குமுன் இரண்டு கேள்விகளை கேட்டுக்கொள்வோம் ஏன்? & எப்படி?
No comments:
Post a Comment