18. ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) - வசனம் : 04
18:04 وَّيُنْذِرَ الَّذِيْنَ قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا
18:4. “அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான்” என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்).சிறிய விளக்கவுரை
A.
எச்சரிக்கை (وَّيُنْذِرَ)
)
1. “அல்லாஹ் தனக்கென்று ஒரு மகனை” ஏற்படுத்திக்கொண்டான் என்று கூறும் மக்களுக்கு இது ஒரு எச்சரிக்கை!
2. நபி ஈஸா “அல்லாஹ்வின் குமாரன்” என்று கூறும் கிருதவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை
3. உஜைர்/இஜ்ரா “அல்லாஹ்வின் குமாரன்” என்று கூறும் யூதர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை
4. தேவகன்னிகள் “அல்லாஹ்வின் குமாரிகள்” என்று கூறும் மக்கத்து பழங்குடியினர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை (இபின் இஷாக்)
B.
“எச்சரிக்கை” ஏன்?
1. ஏகத்துவதில், அல்லாஹ்வின் திருநாமங்களில் (தவ்ஹீத் அஸ்மாவுள் ஷிஃபத்) இல்லாதவற்றை செயல்படுத்துவதால் இது இணைவைத்தல் ஆகும்.
2.
அல்லாஹ்வை பற்றி யாதொரு அறிவும் அதிகாரமும் இல்லாதவர்களின் பேச்சு
C.
எச்சரிக்கையும் ஓரிறை
அழைப்புதான்!
1. தாவாஹ் அல்லாஹ்வின் பால் மக்களை அழைப்பது இரண்டு கொள்கைகளை கொண்டது
i.
நன்மாராயம் (பஷீரன்) கூறுவது
ii.
தீயவழியை தவிர்க்க மக்களை எச்சரிப்பது (நதீரன்)
2. அல்லாஹ் குர் ஆனால் 35:24 கூறுகின்றான்
"நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை."
3. மக்களை எச்சரிப்பதில் நாம் நாகரீகத்தியும் மரியாதையையும் கடைபிடிக்கவேண்டும்
4. எச்சரிப்பது ஒரு பொறுப்பான கவனிப்பும் அக்கறையும் ஆகும்!
உங்கள் வாழ்க்கையில் இதை கொண்டு வாருங்கள் (செயல் திட்டம்)
1. ஏகத்துவத்தை பரப்புங்கள்! – இங்கு செயல் திட்டம் மிகவெளிப்படையானது "எச்சரிப்பது" தெளிவுகொள்ளுக: எச்சரிக்கை அல்லாஹ்வின் புறத்திலிருந்து. நமது முஸ்லிமல்லாத நண்பர்கள், வேலையாட்கள், அண்டை வீட்டார் என எல்லோருக்கும் இறைசெய்தியை பரப்புவோம், வாய்ப்புகாக காத்திராமல் வாய்ப்பை உருவாக்குவோம்.
2. ஏகத்துவம்
பயில்வோம்! (அல்லாஹ்வின் திருநாமங்கள் – தவ்ஹீத், அஸ்மாவுள் ஷிஃபத்) –
பயில்வதின் நோக்கம் என்ன? யூதர்கள், கிருதவர்கள், முஸ்லிமல்லாதவர்கள் இணைவைப்பதற்கான காரணம் அவர்கள் அல்லாஹ்வின் ஆற்றலை (அஸ்மாவுள் ஷிஃபத்) அறியாததுதான்.. அல்லாஹ்வின் தனித்தன்மையை அவர்கள் அறியவில்லை. “அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை (குர்ஆன் 112:3)... நாம் ஷெய்த்தானின் பிடியில், வழிகேட்டில் சிக்கவேண்டாம், மார்கத்தை தெளிவாக கற்போம். அல்லாஹ் நம்மை நல்வழிப்படுத்துவானாக, நம்மை காத்தருள்வானாக.
No comments:
Post a Comment