18. ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) - வசனம் : 05
1. இன்றே கற்க துவங்குவோம்! – தெளிவுபெறுவோம் நமது அறிவில் அல்லாஹ் அருள்புரியட்டும்: அறிவீன்மையால்
ஏற்படும் பேராபத்துகள் இணைவைத்தல் அது நரகத்திற்கு இழுத்துச்செல்லும், இறைக்கல்வி நம்மை நரகிலிருந்து காக்கும் என்றல் அதை நாம் கற்று தெளிவுபெறவேண்டாமா?
2. ஷிர்க்கை இணைவைத்தலை தெளிவாக தெரிந்துகொள்வோம்! – முந்தைய வசனத்தில் தவ்ஹீதின் முக்கியத்துவத்தை
உணர்ந்தோம் இங்கு ஷிர்க்கை பற்றி தெரிந்துகொண்டு அதிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்வோம்.
18:5 مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ وَّلَا لِاٰبَآٮِٕهِمْؕ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ اَفْوَاهِهِمْؕ اِنْ يَّقُوْلُوْنَ اِلَّا كَذِبًا
அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை; அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாபமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி
வேறில்லை
A.
ஒரு விஷத்தைபற்றி எவ்வித அறிவாதாரமுமில்லாமல் பேசுவது (مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ)
1. அல்லாஹ்வை பற்றி அறியாமையில் பேசுவது மாபெரும் பாவச்செயலாகும் (குற்றச்செயலாகும்) அம்மூடர்களை அல்லாஹ் கோபத்துடன் ஏசுகின்றான்.
2. நான்காம் வசனத்தின் பொருள்; அவர்கள் அல்லாஹ்விற்கு குமாரிகளும் குமாரர்களும், மேலும் பல பொய்களை இட்டுக்கட்டுகிறார்கள், அல்லாஹ் அவன் தூயவன், அவர்கள் கூறும் பொய்களுக்கு அப்பாற்பட்டவன்.
3. அல்லாஹ் குர் ஆனில் கூறுகின்றான்:
“என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்; பாவங்கள்; நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே; நீங்கள் அல்லாஹ்வுக்கு
இணைகற்பித்தல்,
நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.”
(குர்ஆன் 7:33)
4. மூதாதையர்கள் (لِاٰبَآٮِٕهِمْ)என்று இங்கு குறிப்பிட்டிருப்பது; அவர்களை
முன்னிறுத்தி இவர்கள் சத்தியத்தை ஏற்க மறுக்கின்றனர்.
5. மாபெரும் வார்த்தையின் (كَبُرَتْ كَلِمَةً) வாயிலாக அவர்கள் கூறுவது “மாபெரும் பொய்” அல்லது “மிகக்கடுமையான வார்த்தை” என்ற உணர்த்தல்
6. இந்த மாபெரும் குற்றம், இணைவைப்பில் கொண்டுசேர்த்துவிடும், அதற்கான கூலி நரகத்தை தவிர வேறெதுவும் எல்லை.
B.
மதநம்பிக்கை ஆதாரங்களின் அடிப்படையாகும்
1. அல்லாஹ் கூறுகின்றான் "அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை” (اِنْ يَّقُوْلُوْنَ اِلَّا كَذِبًا) ஏனென்றால் அவர்கள் கூறுவதை மெய்ப்பிக்க அவர்களித்தில் யாதொரு ஆதாரமும் இல்லை.
2. இதன் பொருள், தீனை பற்றிய விஷயங்களில் தெளிவான ஆதரங்களை கொண்டு புரிதல் வேண்டும்
3. இஸ்லாத்தின் தெளிவான ஆதாரங்கள் இரண்டு மட்டுமே குர்ஆனும் சுன்னாஹ்வும்
உங்கள் வாழ்க்கையில் இதை கொண்டு வாருங்கள் (செயல் திட்டம்)
No comments:
Post a Comment